Tuesday, December 27, 2011

முதல் டைரி



"ஆழ் மனதின் ரகசியங்கள்

காக்கும் பெட்டகம்" பழைய டைரியை

தூசு தட்டுகையில் உணர்ந்தது!!


புரட்ட புரட்ட காத்திருக்கின்றன

மனம் புதைத்த ஆச்சரியங்கள்!!

முக்கால் பங்கு ஆக்ரமித்துள்ளது

முதல் காதல்!!


சில பக்கங்கள் சிரிப்பை தந்தாலும்

பல பக்கங்கள் அழவே வைக்கின்றன!!


பதியப்பட்ட பத்திகளினூடே

கன்னம் வருடும் கனாக்களும்

நெஞ்சம் நெருடும் கணங்களும்!!


உமிழ்ந்து கொட்டிய உணர்வுகளை

உணர்வற்று தாங்கி நிற்கும் சுமைதாங்கி!

இடிதாங்கி எனவும் வழங்கலாம், மிகையாகாது!!


முதல் காதல்,

முதல் முத்தம்,

முதல் நட்பு,

வரிசையில் போட்டியின்றி இணைந்து கொள்கிறது

முதல் டைரி!!!

-வினோதன்


No comments:

Post a Comment